ஈமான் பற்றிய கோட்பாட்டின் படி மார்க்க கட்டளைக்கு ஏற்ப செயற்படுவதை
ஈமானின் ஒரு அம்சமாக பார்க்கின்றனர். ஈமான் என்பது வெறும் நம்பிக்கை
மட்டுமன்றி நீதி, நேர்மை, உண்மை போன்ற பண்புகளைச் சார்ந்து வாழ்வது
ஈமானுடன் சம்பந்தப்பட்டது. முஃமினான ஒவ்வொருவரும் இப்பண்புகளைப்
பெற்றிருக்க வேண்டும். இப்பண்பு ஒருவனிடத்தில் காணப்படாவிட்டாலும் அவன்
பெரும் பாவம் செய்தவனாகவும் காபிராகவும் கருதப்படுவான் என்பது அவர்களின்
கருத்தாகும். எனவே தான் எதிர்த்துப் போராடாதவர்களின் சொத்துக்களை
சூறையாடுவதை ஹலாலாக கணித்தனர். ஈமான் பற்றிய அவர்களின் கொள்கை காரணமாக
மார்க்க கடமைகளை அனுஷ்டிப்பதில் கண்டிப்பாக இருந்தனர். கொள்கைக்காக உயிர்
துறப்பதை நியாயமாகவும் கெளரவமாகவும் மதித்தனர். வீரமும் நன்னடைத்தையும்
உடையவர்கள் ஒழிவு மறைவின்றி வெளிப்படையாக செயல் படவேண்டும் எனவும் சொல்லும்
செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர். இந்த வகையில்
கொள்கைக்காக பிழையாக உயிர் துறப்பதையும் போராடுவதையும் தவிர ஏனைய
விடயங்களில் சிறந்தவர்களாகவே காணப்படுகின்றனர். நாடோடிகளான அவர்களிடம் பிற
கலாச்சாரம் தென்படவில்லை. குர்ஆன், சுன்னாவை எந்த விளக்கமுமின்றி
வெளிப்படையாக கருத்தை விளங்கி வந்தனர். உயரிய பண்புகள் அவர்களிடம்
தென்பட்டதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
No comments:
Post a Comment