அரேபியாவின் புவியியல் சூழல் அதன் பொருளாதார அமைப்பில் பெரும்
செல்வாக்குச் செலுத்தியுள்ளது. நீர்வளமோ, நிலவளமோ அற்ற அப்பாலைவனத்தில்
இடைக்கிடை தென்படும் பசுந்தரைகள் அவர்களுக்கு விவசாய ரீதியில் உதவ வல்லன.
அவற்றின் அருகே விளையும் பயிரின்ங்கள் வாழ்க்கைக்குப் போதியதாக
இருக்கவில்லையாதலால் பலர் மந்தைகளை மேய்த்தனர். சிலர் விவசாயத்தில் ஈடுபட
மிகச் சிலர் வர்த்தகத்திலும் ஈடுபட்டனர். மழை மிக அருமையாக இருந்தாலும்
நதிகள் இன்மையாலும் அரேபியாவின் நிலப்பரப்பு விவசாயத்திற்கு உதவ்வில்லை.
அங்கு வீசிய உஷ்ணக் காற்றும் நிலத்தின் உலர் தன்மையையும் அதன் நில வளத்தை
மேலும் பாதித்தன. இதனால் போதிய விவசாயப் பயிர்களை அங்கு உற்பத்தி செய்ய
முடியவில்லை.
எமன், தாயிப் பிரதேசங்கள் மட்டுமே விவசாயத்திற்கு ஓரளவு உகந்த்தாக
இருந்தன. எனினும் ஹிஜாஸின் பாலைவனப் பசுந்தரைகளுக்கு அருகில் கோதுமை
விளைந்த்து. ஹிஜாஸில் பேரீத்தம் செழித்த்து. குதிரையின் உணவுக்காக பார்லி
பயிரிடப்பட்ட்து. அம்மான் பகுதியில் நெல்லரிசி பயிரிடப்பட்ட்து. பாலை நிலப்
பகுதியில் புளிய மரங்கள் இருந்தன. மரக்கறி வகைகள், திராட்சை, அப்பிள்,
மாதுளை. தோடை, வாழை என்பன தாயிபில் விளைந்தன.
ஹிஜாஸின் முக்கிய விளை பொருளாக பேரீந்து அமைந்திருந்த்து. அதன் கனிகளை
மக்கள் உணவாக்க் கொண்டனர். அதன் விதைகளை நொருக்கி ஒட்டகைக்கு உணவாக்க்
கொடுத்தனர். பேரீந்தை அறுவடைக்குப் பின் வருடக்கணக்கில் எந்தச்
சிரம்முமின்றி நெடு நாட்களுக்கு கெடாமல் வைத்திருக்க முடியும். பேரீந்தில்
நிறைந்த கலோரிப் பெறுமானம் உண்டு. பேரீந்து விளையும் தோட்டங்கள் அதிகம்
பெறுமதி உடையனவாய் இருந்தன.
‘ பூமியில் கனிவர்க்க்ங்களும் ( குலைகள் நிறைந்த) பாளைகளையுடைய பேரீத்த மரங்களும் உற்பத்தியாகின்றன’. அர்ரஹ்மான் – 11.
அரபியரின் வாழ்க்கைக்கு மந்தை மேய்ப்பது வரப்பிரசாதமாக அமைந்திருந்த்து.
சனத்தொகையில் 5/6 பங்கினர் மந்தை மேய்ப்பதில் ஈடுபட்டனர். ஒட்டகை, ஆடு,
மாடு என்பன பெருமளவில் வளர்க்கப்பட்டன. நாடோடி மக்களின் பாலை நில வாழ்வு
ஒட்டகமின்றேல் சாத்தியமற்றதாகிவிடும் எனுமளவிற்கு ஒட்டகை முக்கியத்துவம்
பெற்றிருந்த்து.
பாலைவன வாகனமாகவும் வர்த்தகப் பண்டங்களைச் சுமக்கும் சுமை தாங்கியாகவும்
ஒட்டகை பயன்பட்ட்து. மக்கள் அதன் பாலை அருந்தி மாமிசத்தை உண்டு அதன் தோலை
ஆடையாகவும் கூடாரத்தின் புடவையாகவும் பயன்படுத்தினர். பெண்களுக்கு வாங்கும்
சீதனமாகவும் சூதாட்ட்த்தின் போது ஈட்டுப் பொருளாகவும் நஷ்ட ஈடு
வழங்குவதற்காகவும் ஒட்டகை பயன்பட்ட்து. விளை நிலத்தின் பெறுமானம் ஒட்டகையை
ஊடகமாக்க் கொண்டு மதிக்கப்பட்ட்து. நபிகளாரின் தந்தை அப்துல்லாஹ்வை
குர்பானி கொடுப்பதற்குப் பதிலாக 100 ஒட்டகங்கள் பிரதியீடாக
வழங்கப்பட்ட்தைக் காணலாம். ஷைக் ஒருவரின் சொத்து அவரின் ஒட்டகைகளைக் கொண்டு
நிர்ணயிக்கப்பட்ட்து. இன்று பணம் புரியும் அனைத்து அம்சங்களையும் அன்று
ஒட்டகை புரிந்த்து. அது சிறந்த ஞாபக சக்தி படைத்த்து. அடிச் சுவடுகளற்ற
பாலைவனத்திலேயேதான் ஒரே ஒரு முறை சென்ற பாதையைக் கூட அது மனதில் பதிய
வைத்திருக்கும். மாரி காலத்தில் சுமார் 25 தின்ங்களுக்கும் கோடை காலத்தில் 5
தின்ங்களுக்கும் நீர் அருந்தாமலேயே இருக்கும் ஆற்றல் அதற்குண்டு.
பாலைவனத்தில் பிரயாணிகள் நீரின்றித் தவிக்கும் போது அதன் தொண்டையில் ஒரு
சிறு தடியைச் செலுத்தி அது சேர்த்து வைத்திருக்கும் நீரைக் க்க்கச் செய்து
அதனைக் குடித்து தாகம் தணிப்பர்.
அரபு மொழியில் ஒட்டகத்தை குறிக்கும் சொற்கள் ஆயிரத்திற்கும் அதிகமாக
உண்டென்பர். அரேபியாவில் மட்டும் தான் ஒட்டகைகள் வளர்க்கப்படுகின்றன
என்பதும் குறிப்பிட்த்தக்கது. அரேபியாவில் நஜ்த் பிரதேசம் குதிரை
வளர்ப்புக்கு பிரசித்தம் பெற்றிருந்த்து. அரேபியக் குதிரை அழகு, புத்திக்
கூர்மை என்பவற்றுக்குப் பெயர் பெற்ற்து. எஜமானுக்காக தன்னையை
அர்ப்பணிக்கும் பண்பு அதனிடம் உண்டு. அரேபியரின் பணம் படைத்த சொத்தாக இது
இருந்த்து. வேட்டையாடவும் கொள்ளையிடவும் துரிதமாகச் சென்று மீளவும் குதிரை
பெரிதும் உபயோகிக்கப்பட்ட்து.
போர்க் காலங்களில் அதன் பயன்பாடு இலக்கியங்களில் பாராட்டப்படுமளவிற்கு
முக்கியத்துவம் பெற்றிருந்த்து. உம்மான், பாரசீக வளைகுடாப் பிரதேசங்களில்
முத்துக் குளிப்பு நடைபெற்றது. தென் அரேபியாவில் எமன் பிரதேசம்
‘அரேபியாவின் தானியக் களஞ்சியம்’ எனுமளவிற்கு விவசாயத்தில் முக்கியத்துவம்
பெற்றிருந்த்து. அங்கு தங்கம் முதலான கனிப் பொருட்கள் கிடைத்த்துடன்
சாம்பறானி எனும் வாசனைப் பொருளும் கிடைத்த்து. நகர்ப் புறத்தில் வாழ்ந்த
அரேபியர் வர்த்தகம் செய்து பொருளீட்டினர். அரபுத் தீபகற்பத்தினூடாகச் சென்ற
வர்த்தகப் பாதை இந்து சமுத்திரத்தையும் சிரியாப் பிரதேசத்தையும்
இணைத்த்து. செங்கடல் கப்பற் போக்குவரத்து பாதுகாப்பற்றதாக
அமைந்திருந்த்தால் வர்த்தகர்கள் ஸன்ஆவிலிருந்து தரை மார்க்கமாக சிரியாவை
நோக்கி சென்றனர்.
இந்தப் பாதை மிக நீண்ட்தாகவும் கொள்ளையர்களின் அச்சுறுத்தல்கள்
நிறைந்த்தாகவும் இருந்த்து. இதனால் சில காலங்களில் வர்த்தகர்கள்
கூட்டங்கூட்டமாக்க் குறித்த பாதையில் வர்த்தகத்திற்குச் சென்றனர்.
எமனிலிருந்து செங்கடல் கரையோரமாகச் சென்ற இப்பாதையில் மக்கா
அமைந்திருந்த்து. இதனால் மக்காவாசிகள் இவ்வர்த்தகப் பாதையை பயன்படுத்தி
பொருளீட்டிக் கொண்டனர். மக்காவில் வாழ்ந்த சிலர் வழிகாட்டிகளாகப்
பணிபுரிந்தனர். சிலர் நீர் இறைத்துக் கொடுப்பவர்களாகவும் கடமையாற்றிப்
பொருளீட்டினர்.
அரேபியர் போரிலும் கொள்ளையடிப்பதிலும் பெரு விருப்பமுடையவராய்
இருந்தாலும் கூட வாக்குறுதியை நிறைவேற்றித் தம் புகழைக் காப்பதற்காகத் தம்
உயிரையும் தியாகம் செய்யும் பண்பு அவர்களிடமிருந்த்து. இப்பண்பின்
காரணமாகவே வர்த்தகர்கள் அவர்களை வேலைக்கமர்த்தினர். ஹிஜாஸில் வாழ்ந்த
அரேபியர் கீழைத்தேய நாடுகளிலிருந்து கொண்டு வந்த பொருட்களை
அமனிகளிடமிருந்து வாங்கினர். மேற்கு நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட
பொருட்களை சிரியாவிலிருந்து பெற்றனர். அவற்றைப் பல்வேறு சந்தைகளில்
விற்றனர்.
இப்பாதை மக்காவினூடாகச் சென்றதால் இப்பாதையின் ஆதிக்கத்தை
தங்கியிருந்தனர். த்த்தம் வர்த்தக நலன் பேணுவதற்காக ரோமர்களும்
அபீஸீனியர்களும் ஜினானாவின் …………… சந்த்திகளெனக் குறைஷிகள்
அழைக்கப்பட்டனர். அங்கு அமைந்திருந்தமை. வர்த்தகர்கள் மக்காவினூடாகச்
செல்வதை ஊக்குவித்த்து. மக்காவினூடாக அவர்கள் கொண்டு செல்லும் வர்த்தகப்
பொருட்களுக்கு மக்கா வாசிகள் 10% வரி அறவிட்டனர். பாதுகாப்பு வரி, நகர்
நீங்கும் வரி என்பனவும் அறவிடப்பட்டன. இவற்றை மேற்பார்வை செய்வதற்காக ஒரு
காரியாலயமும் மக்காவில் இருந்த்து.
அரேபியர் மேற்கொண்ட வர்த்தகம் பற்றி சூரத்துல் குறைஷ் 105வது அத்தியாயம்
குறிப்பிடுகின்றது. மாரியிலும் கோடையிலும் இரு வர்த்தக்க் குழுக்கள்
வர்த்தகத்தில் சென்றன. கஃபாவின் பரிபாலனம் குறைஷிகள் வசமிருந்த்தால்
வர்த்தகத்திற்காகச் சென்றபோது அவர்கள் தாம் சென்ற இடங்களிலெல்லாம்
பாதுகாப்புப் பெற்றனர்.
மக்காவாசிகள் தன் பணத்தை வீட்டில் முடிக்கி வைக்க விரும்பவில்லை. கூட்டு
வர்த்தகத்தில் முதலீட்டு இலாபத்தில் சரிபாதியைப் பெற்றுக் கொண்டனர்.
இதனால் சாதாரண பிரஜையும் தான் கையிலுள்ள சிறிய மூலதனத்தையும் வர்த்தகத்தில்
முதலீடு செய்தனர்.
இந்த வர்த்தகத்தில் பொது மக்களின் நலன் பேணப்பட்ட்தால் தேவைப்பட்ட
போதெல்லாம் வர்த்தக்க் குழுக்களுக்கு அரேபியர், அரேபியாவில் பாதுகாப்பை
வழங்கினர். உதவிகளும் செய்தனர். மக்காவில் வர்த்தக்க் குழுக்களில் சிலவேளை
2,500க்கும் அதிகமான ஒட்டகங்களோடு 900க்கும் அதிகமான வர்த்தகர்களும்
இருப்பர். இவ்வர்த்தகர்களுக்கான வெளி நாட்டுப் பாதுகாப்பைப் பெற அயல்
நாட்டார்களான எதியோப்பியர், எமன், சிரியா, ரஸ்ஸான் என்பவற்றுடன்
மக்காவாசிகள் பாதுகாப்பு உடன்படிக்கைகளைச் செய்து கொண்டிருந்தனர். மக்காப்
பெண்களும் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். அபூ ஜஹ்லின் தாய் அத்தர் வியாபாரம்
செய்தார். நபிகளாரின் மனைவி கதீஜா ரழி, அபூ ஸுப்யானின் மனைவி ஹிந்தா
போன்றோர் பிரபல வர்த்தகர்களாவர். தாயிபில் கைத்தொழில் முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன. அங்கே தோல் பதனிடும் தொழிற்சாலை இருந்த்து. அப்பகுதி வளி
மாறுமளவிற்கு அத்தொழிற்சாலை இருந்த்து. தாயிபினூடாகச் செல்லும்
வர்த்தகர்களுக்கு இவ்வுற்பத்திப் பொருட்களையும் கோதுமை பழவர்க்கங்கள் போன்ற
விவசாயப் பொருட்களையும் அவற்றிலிருந்து வடித்தெடுக்கப்படும் மதுவையும்
விற்பனை செய்தனர்.
அரபிகளிடம் அறிமுகமாயிருந்த வட்டி மிகவும் கொடுமையானது. குறித்த
தினத்தில் மீளக் கொடுக்க முடியாது போனால் முதலுக்கும் வட்டிக்குமாய்ச்
சேர்த்து வட்டி அறவிடப்பட்ட்து. உரிய தினத்தில் கடனைக் கொடுக்க முடியாமல்
மேலும் தவணை பெறப்பட்டால் வட்டி வீதம் முன்பிலும் அதிகரிக்கப்பட்டு தவணை
வழங்கப்பட்ட்து. கடனைச் செலுத்த்த் தவறும் பட்சத்தில் கடன் வாங்கியவனின்
மனைவியையும் பிள்ளைகளையும் கடன் கொடுத்தவன் தன் உடமையாக்கிக் கொள்வான்.
அரேபியாவில் வாழ்ந்த யூதர்கள் வட்டித் தொழிலில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக
இருந்தனர். அரேபிய சமூகத்தில் காணப்பட்ட அடிமைகளும் எஜமானுக்கு உழைத்துக்
கொடுக்கும் பொருளாதாரக் காரணியாக்க் கருதப்பட்டனர்.
No comments:
Post a Comment