அப்பாஸியக் காலம்

பார்க்கவும் ( ஜாஹிலியக் கால உரைநடை)

சிறப்பாக வளர்ச்சி கண்டு வந்த அரபு இலக்கணம், இலக்கியத் துறைக்கு அப்பாஸிய ஆட்சியின் போது கி.பி.800ல் காகித உற்பத்தி செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டமை பெரிய வரப் பிரசாதமாக அமைந்தது. எனவே, எழுத்துத் துறையும் நூலாக்கமும் புது மெருகு பெற்றன. 

இக்காலத்தில் அல் அதப் எனற தனி இலக்கியம் தோன்றி வளர்ந்தது. இவ்விலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் அப்துல்லாஹ் பின் முக்னஅ என்பவர் சிறப்புற்று விளங்குகிறார். இவர் பல பாரசீக நூல்களை அரபுக்கு மொழிபெயர்த்தார். அவற்றுள் கலீலா வதிம்னா மிகப் பிரபல்யம் வாய்ந்ததாகும். மேலும், அல் அதபுஸ் ஸஈர், அல் அதபுல் கபீர் என்ற நூல்களையும் எழுதினார்.

இப்னு குதைபா – அஹ்மத் முஹம்மத் அப்துல்லாஹ் பின் குதைபா 828-889, என்பவரும் இவ்விலக்கிய வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவராவார். அதபுல் கிதாப், அஷ்ஷஃர் வஷ்ஷுஅரா, உயூனுல் அஹ்பார், கிதாபுல் மஆரிப் என்பன இவரது முக்கிய நூல்களாகும்.

அப்பாஸியக் கால உரை நடை இலக்கிய ஆசிரியர்களுள் பஸராவைச் சேர்ந்த அபு உதுமான் அல்ஜாஹாழ் 775-868, என்பவரும் பிரதானமானவராவார். முஃதஸிலாக் கொள்கையைச் ஆதரித்த இவர் பல நூல்களை எழுதியுள்ளார். அல்ஹயவான், அல் பயான் வத் தப்யீன், அத்தாஜ் வல் புகலாஉ போன்றன.

இக்காலப் பிரிவில் அல் அதப் வகையைச் சாராத பல விடயங்களையும் ஒரே நேரத்தில் உள்ளடக்கிய நூல்களும் தோன்றின.

அந்த வகையில்
  • கொர்டோவாவைச் சேர்ந்த அஹ்மத் பின் அப்த் ரிப்பாஹ் 860-940, அல்குர்துபா மின் அஃழமி அத்திப்பாஉல் அந்தலுஸ்.
  • அபுல் பரஜ் அல் அஸ்பஹானி-967, அல் அகானீ என்பன குறிப்பிடத்தக்கவை.

No comments: