அரபு இலக்கியத்தில் அல்குர்ஆனின் பங்களிப்பு

அரபு இலக்கியத்தில் அல்குர்ஆனின் பங்களிப்பு

இஸ்லாத்தின் வருகையோடு அரபு சமூகத்தில் காணப்பட்ட கவிதைகளின் போக்கும் மாற்றமடைந்தது. கோத்திர, குழு ரீதியான வெறியுணர்வை ஒழித்து ஓர் உயரிய சமூகத்தை இஸ்லாம் கட்டியெழுப்பியது. அச்சமூகத்தில் மலிந்து காணப்பட்ட குழப்பம், காட்டு மிராண்டித்தனம், சிலை வணக்கம் போன்றவற்றிலிருந்து அவர்களை மீட்டெடுத்து உன்னதமானவர்களாக அவர்களை மாற்றியது. அவர்களிடையை சாந்தி, சமாதானம், அமைதி, சுபீட்சம், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் என்பவற்றை ஏற்படுத்தியது.

இத்தகைய சமூக மாற்றம் இலக்கியத்திலும் பாரிய மாற்றங்களைத் தோற்றுவித்தது. ஏனெனில், இலக்கியம் என்பது சமூகத்தைப் பிரதிபளிக்கும் கண்ணாடியே. எனவே, இஸ்லாத்தின் வருகையின் பின்னர் இலக்கிய கருப் பொருட்களாக இழிவான விடயங்கள் நீங்கி உன்னதமான விடயங்கள் இடம் பிடித்துக் கொண்டன.

அந்த வகையில், அரபிலக்கியத்தில் உருவான முதல் உரை நடை இலக்கிய நூல் அல்குர்ஆன் ஆகும். அல்குர்ஆனின் இலக்கிய நடை சுத்த உரை நடையோ – நத்ர் – ,சுத்த செய்யுள் நடையோ – அந்நத்ம் – அல்ல. மாறாக, அது அஷ்ஷஜஃ அமைப்பைக் கொண்டதாகும். இந்த நடையொட்டியே அப்பாஸியக் காலத்தில் முஅல்லகாத் என்ற இலக்கிய வகை தோன்றியது.

அல்குர்ஆனின் بيان – بلاغة க்கு நிகராக மொழியில் எதுவுமே கிடையாது.

எனவேதான், அல்குர்ஆனை ஓதுவதனை செவிமடுத்த வலீத் பின் முகீரா தனது குழுவினரிடம் பின்வருமாறு கூறினான் :

لقد سمعت من محمد كلاما ماهو من كلام الإنس و الجن وان له
لحلاوة وان وان عليه لتلاوة وان أعلاه لمثمر وان أسفله لمغدق
وانه ليعلو ولا يعلي عليه
இதனால் அல்குர்ஆன் பின்வருமாறு சவால் விடுகிறது :
قل لئن اجتمعت الإنس والجن علي أن بأتوا بمثل هذا القرآن
لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا-
88 – الإسراء
وإن كنتم في ريب مما أنزلنا إلي عبدنا فأتو بسورة من مثله وادعو شهدائكم من دون الله إن كنتم صادقين -
البقرة – 23

இதனை விளக்க வந்த இமாம் ஜாஹிழ் பின்வருமாறு குறிப்பிடுகிறார் :
அரபிகள் மத்தியில் மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள்,கவிஞர்கள், பேச்சாளர்கள் நிறைந்திருந்தனர். மேற்கண்டவாறு கூறி அவர்களை அல்குர்ஆன் முறியடித்த போது அவர்களால் முடியுமாறு இருந்த ஒன்று முஸ்லிம்களுக்கு எதிராக போர் புரிவது மாத்திரமே.

ஒரு சூரத்தை அல்ல ஒரு வசனத்தையேனும் அவர்களால் கொண்டு வர முடியவில்லை.

அல்குர்ஆனின் மொழி நடை பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது :
الله أنزل أحسن الحديث كتابا متشابها

அல்குர்ஆனின் சூராக்கள் طوال ,قصار , متوسط என்று நீண்ட , குறுகிய, மத்திமம் அளவுகளைப் பெற்றதோடு مكي, مدني என்ற வகையில் கால வேறுபாட்டையும் கருத்திற் கொண்டு மக்களை விழித்து அவர்களைப் பண்படுத்தியது.

இவ்வகையில் அல்குர்ஆன் அரபு இலக்கியத்தில் பின்வரும் மாற்றங்களைச் செய்தது எனலாம்.

■அல்குர்ஆனின் மொழி குறைஷிகளின் மொழியாக இருந்தமையால், அம்மொழி இலக்கிய மொழியாக மாறியது. ஒருமித்த அரபு மொழியை அனைவரும் பயன்படுத்த வழிவகுத்தது. மனிதன் எங்கு வாழ்ந்தாலும் அல்குர்ஆனை அரபு மொழியிலேயே ஓத வேண்டும் எனப் பணித்தது.

■ இலக்கிய கருப் பொருட்கள் புதியதாயின. புதிய சொற்கள் அறிமுகமாயின : الفرقان – الشرك – المنافق – الصلاة – الزكاة – الصراط -
النار – الجنة

■ ஜா.கருத்துக்களைக் கொண்ட கவிதைகள் ஒதுக்கப்பட்டன.

■ அல்குர்ஆனின் அணி இலக்கணம் بلاغة , உயர் இலக்கிய நடை என்பவற்றால் மக்கள் கவரப்பட்டனர். அதனால் அல்குர்ஆனின் கருத்துக்கள் , சொற்கள் கவிதைகளில் கையாளப்பட்டன.

■ அரபு மொழியை சாகாவரம் பெற்ற மொழியாக அல்குர்ஆன் மாற்றியது.

■ அரபு மொழியின் போக்கை மிகத் தெளிவாக வரையறுத்தது.

■ பழைய இலக்கிய நடைகளில் இருந்து அதன் நடையை ஒழுங்குபடுத்தியது.

■ கருத்து ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

- ஆழம், நுட்பம், ஒழுங்கு என்பன் பேணப்பட்டன.
- நாகரிகமற்ற ஜா.கால கருத்துக்கள் புறந்தள்ளப்பட்டன. – கோத்திர வெறி.
- அளவுக்கு மீறிய புகழ், இகழ் கைவிடப்பட்டு தூய்மை, நன்மை என்பவற்றுக்கு முதலிடம் வழங்கப்பட்டது.

■ அரபிலக்கியத்தில் அகராதிகளின் தோற்றத்திற்கு அல்குர்ஆன் அடிப்படையாக அமைந்தது. அதாவது அரபியல்லாத வேற்று மொழி பேசுவோர் இஸ்லாத்தைத் தழுவிய போது அரபு மொழியுடன் அவர்களது மொழியும் கலந்து அரபு மொழியின் தூய்மை மாசுபட ஆரம்பித்தது. எனவே, மொழியின் தூய்மையைப் பாதுகாக்கவென

أبو الأسود الدولي அரபு இலக்கணத்தை வகுத்தார். இவர் எழுதிய நூல்
أصول النحو العربي . இவரை இப்பணிக்கு தூண்டிய உடனடிக் காரணம்
فعصى فرعونُ الرسولَ என்ற வசனத்தை ஒருவர்
فعص فرعونَ الرسولُ என ஓதியதாகும்.

இவரைத் தொடர்ந்து خليل بن أحمد என்பவர் كتاب العين எனும் அகராதியைத் தொகுத்தார். இவரைத் தொடர்ந்து سيبويه , القراء , الكساني போன்றோர் அல்குர்ஆனின் அடிப்படையில் இலக்கண நூல்களை எழுதினார்கள்.

அல்குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு அரபு இலக்கணம், அகராதிகள் என்பன தொகுக்கப்பட்டாலும் சொல் விளக்கத்துக்காக ஜா.கால கவிதைகளும் மேற்கோள்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

■ அல்குர்ஆனின் உயர்ந்த மொழி நடைக்கு மக்கள் பழக்கப்படுத்தப்பட்டனர். உண்மையில் அல்குர்ஆனின் மொழி நடையின் மேன்மையை விளங்க ஜா.கால கவிதைகளில் ( المعلقات ) காணப்படும் குறைகளை அறிதல் அவசியம். அதாவது :
- அவை அனைத்துக் கலைகளையும் விட்டும் நீங்கி வெறும் கவிதைகளை மட்டுமே கொண்டிருந்தன. أحمد أمين , عباس محمود العقاد
- அவை சிந்தனை, ஆன்மீக ரீதியான இலட்சியங்களை விட்டும் தனித்திருந்தன.
- இலக்கிய மொழியை விட நாட்டுப் பாஷையிலேயே இருந்தன.
- மொழி ரீதியான பல தவறுகள் அவற்றில் காணப்பட்டன.

■ அல்குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு பல புதிய கலைகள் தோன்றி வளர்ந்தன. علوم القرأن , التفسير .

No comments: