வீரமும் பெருமையும் – الحماسة والفخر
வீரத்தையும் பெருமையை சுட்டிக் காட்டி கஷ்டங்கள், துன்பங்களை
இலகுபடுத்தி, கோழைத்தனத்தையும் புறமுதுவிட்டு ஓடுவதையும் கண்டித்து
பாடப்படும் கவிதைகள் இவ்வகையைச் சார்ந்தவை.
இவ்வகைக் கவிதைகளை அரபுக் கவிஞர்கள் அதிகம் பாடினர். காரணம் வீரம்,
அபாயங்களைத் தாங்கிக் கொள்ளுதல், போருக்காக முன்னேறுதல், பழிக்குப் பழி
வாங்குதல் போன்ற பண்புகள் அவர்களது இரத்ததில் ஊறியவைகளாக காணப்பட்டன.
பாலைவன வாழ்க்கையும் கோத்திர போட்டியும் இத்தகைய கவிதைகளைப் பாடத் தூண்டின.
பர்கலிமான் என்ற கீழைத்தேய ஆய்வாளர் கூறுகிறார்: “ யுத்தம் என்பது
நாடோடி அரபியின் சிந்தனையை பெரும்பாலும் ஆக்கிரமித்திருந்தது. எனவே யுத்தம்
அவர்களது கவிதையில் முக்கிய பங்கெடுத்தது. அரபிகள் யுத்தம் நடக்க
முன்னரும் அது உக்கிரமமாக நடந்து கொண்டிருக்கும் வேளையிலும் இத்தகைய
கவிதைகளைப் பாடினர்.
அபூ தமாம் அவர்களது ஹி231- ஹமாஸது மின் முக்தாராத் வகைக் கவிதைகள்
பிரதான இடத்தை வகித்தன. புஹுத்தூரி அவர்களும் தனது முக்தாராத்தில் முக்கிய
பங்கைக் கொடுத்தார். இப்னுஸ் ஸஜரி என்பவரின் முக்தாராத்தில் ஜா.கால ஹமாஸா
வகைக் கவிதைகள் அதிகமதிகம் தொகுக்கப்பட்டன.
பஹ்ர் வகைக் கவிதைகளைப் பொறுத்த வரையில் ஒரு கவிஞன் தனதும் தன்
கோத்திரத்தினதும் நற்பண்புகளை, ஒழுக்கப் பிரமாணங்களை பெருமைப்பட பாடுவதே
இவ்வகை கவிதைகளாகும்.
இந்நோக்கத்திற்காக வேண்டி மிக நீளமான கவிதைகளைப் பாடினார்கள். அம்ரு
இப்னு குல்தூம் உடைய முஅல்லகாவும் உமைய்யா பின் அலி அஸ்ஸல்ஜி என்பவருடைய
முஜஹ்மராவும் இவ்வகைக் கவிதைகளை அதிகமாகக் கொண்டிருந்தன.
தம்மிடம் வீரம், போருக்காக முன்னேறுதல், வகையற்றோருக்கு உதவுதல், கொடை,
அண்டை வீட்டினைப் பாதுகாத்தல் போன்ற பண்புகள் இருப்பதாக அவர்கள் பஹ்ர்
கவிதைகளைப் பாடினர். எனினும் அதில் எல்லை மீறிப் போகவில்லை.
المدح
ஒருவருடைய சிறப்புப் பண்புகள், நற்குணங்கள், மகத்தான ஒழுக்கங்கள் பற்றி ஒரு கவிஞன் புகழ்ந்து பாடுவதைக் குறிக்கும்.
ஆரம்ப ஜா.காலத்தில் இக்கவிதைகளைப் பாடுவதன் மூலம் கவிஞர்கள் எவ்வித
இலாபங்களையோ அல்லது அன்பளிப்புக்களையோ பெரும் நோக்கத்தைக்
கொண்டிருக்கவில்லை. மாறாக, உண்மையாகவே ஒருவரது பண்புகளால் அல்லது உதவிகளால்
கவரப்பட்ட கவிஞன் அவரைப் புகழ்வதாக இருந்தது.
ஆனால், அன்பளிப்புக்களும் பிரதி உபகாரங்களும் சமூகத்தில் அதிகரித்த போது
ஆட்சியாளர்களின் இரக்கத்தைப் பெறவும் அவர்களின் உள்ளங்களைக் கவரவும்
அவர்களின் உள்ளங்களில் கர்வத்தையும் அகம்பாவத்தையும் வளர்க்கவும் பொய்யான
பண்புகளைக் கூட கூறி கவி பாடினார்கள்.
இந்த வகையில் அந்நாபிஆ, ஸுஹைர், அல்ஹதீஆ போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
الهجاء
அவனிடம் இல்லை என்று தூற்றுவதும் அல்லது அவனிடம் வெறுக்கத்தக்க பண்புகள் உள்ளன என்று சாடுவதும் இவ்வகைக் கவிதைகளாகும்.
ஜா.கால கவிஞர்களில் சிலர் ஒரே நேரத்தில் ஹஜா / மதஹ் இரண்டிலும்
ஒன்றுபட்டார்கள். பர்கலிமான் இது பற்றி கூறுகையில் ஹஜா வகைக் கவிதைகள் ஒரு
கவிஞனின் கையில் இருக்கும் மந்திரக் கோலாக இருக்கிறது.
எதிரியின் ஆற்றல்களை அதன் மூலம் கவிஞனால் மழுங்கடிக்கச் செய்ய முடியுமாக
இருந்தது. எனவே, இது போன்று கவிதைகளைப் பாடி கவிஞன் வசை மொழிகளை உதிர்க்க
ஆரம்பித்து விட்டால் சூனியக்காரர்கள் அணிவது போன்று ஆடையை உடுத்திக்
கொள்வார்கள்.
ஜா.காலத்தில் ஹஜா வகைக் கவிஞர்களே அதிகமாகக் கெளரவிக்கப்பட்டார்கள்.
காரணம் தனது கவிதையின் வசீகர சக்தி பற்றிய அறிவு அவனிடம் இருக்கின்றது
என்று அவர்கள் கருதியமையாகும்.
ஆரம்ப கால ஹஜா வகைக் கவிதைகளில் மோசமான சொற் பிரயோகங்களைப்
பிரயோகித்ததாக காணவில்லை. ஆனால், அல்ஹதீஆ போன்ற கவிஞர்களின் காலத்தில்
இவ்வகைக் கவிதைகளில் மிக மோசமான சொற் பிரயோகங்கள் கையாளப்பட்டன.
الثرياء
ஒருவர் இறந்தமைக்காக கவலைப்பட்டு அவரது பிரிவைத் தாங்க முடியாது அவரது
சிறப்புப் பண்புகளை எடுத்துக் கூறி பாடப்படும் இரங்கற் பாக்களே இவ்வகைக்
கவிதைகளாகும்.
இக்கவிதைகளில் பூமி சரிவதாகவும் வானம் எரி கற்களை வீசுவதாகவும் அவர்கள்
கூறவில்லை. மாறாக, இறந்தவரது வீரம் , கொடை கொடுக்கும் தன்மை, வாக்கு மாறா
பண்பு போன்ற நற்குணங்களைப் பாடுவதாகவே இவை காணப்பட்டன.
இறந்தவரைப் பற்றி அரசர்கள், தலைவர்கள் முன்னிலையிலும் வைத்து இரங்கற் பா படிப்பர்.
இவ்வகைக் கவிதைகளைப் பெண் கவிஞர்களும் படிப்பர். அவர்களது இளகிய மனமும்
துன்ப துயரங்களைத் தாங்க முடியாத இயல்பும் இதற்கு காரணமாகும். கன்சா ,
ஆதிகா போன்ற பெண் கவிஞர்களைக் குறிப்பிடலாம்.
الغزل
ஜா.கால கவிதைகளில் இவ்வகைக் கவிதைகள் பெரும் பங்கை வகித்தன. பெண்களால்
தொடர்புபடுத்திப் பாடப்படும் கவிதைகளே இவை. இவ்வகைக் கவிதைகள் அம்மக்களின்
கவிப் படைப்பாற்றலை நன்கு வெளிப்படுத்தியது.
இக்கவிதைகளில் பெண்ணின் அழகை வர்ணிப்பதும் அவளது உறவும் பிரிவும் ஏற்படுத்தும் தாக்கங்களை கூறுவதாகவும் அமைந்திருக்கும்.
அராபிய சமூகத்தில் ஒரு ஆணை சிந்தனையாலும் உள்ளத்தாலும் ஒரு பெண் பெரும்
தாக்கத்தை விளைவித்தாள். அவன் ஒரு பெண்ணுக்காக எத்தகைய அபாயங்களையும்
சந்திக்கத் தயாரானான்.
கவிஞர்கள் இத்தகைய ஆண் – பெண் உறவினைப் பற்றி கவி பாடாத சந்தர்ப்பங்களே இல்லை என கூறுமளவுக்கு நிலைமை காணப்பட்டது.
கவிஞர்கள் தம் கவிதைகளை கஸீதாக்களை ஆணும் பெண்ணும் பற்றி அவர்கள் கழித்த
இன்பமான நாட்களின் அனுபவங்களைப் பற்றி கூறியே ஆரம்பிப்பார்கள்.
சில கவிஞர்கள் இத்துறையில் மிகத் தீவிரமாகச் சென்று மோசமான உணர்வுகளைத்
தூண்டும் வகையில் பெண்ணின் அவயங்களை வர்ணிப்பர். இவர்களில் மிகப்
பிரபலமானவர் முஹல்ஹல் என்ற ஜாஹிலியக் கவிஞர். இவரை விட இம்ர உல் கைஸ்
சளைத்தவரல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்நாபிஆவும் கூட வர்ணிக்கக் கூடாத பகுதிகளைக் கூட அப்பட்டமாக வர்ணித்ததன் மூலம் இவ்வகைக் கவிஞர்களின் பட்டியலில் இடம்பெறுகிறார்.
இவ்வாறு கூறும் போது எல்லாக் கவிஞர்களும் பெண்ணை இப்படித்தான்
வர்ணித்தார்கள் என்பதல்ல. அல்கமஹ் பின் அப்துஹ் என்ற கவிஞர் பெண்ணுக்கு
இருக்க வேண்டிய அடக்கம், கற்பு, ஒழுக்கம் போன்ற நற்பண்புகளையும்
பாடியுள்ளார்.
குறிப்பாக அனைத்து முஅல்லாகாத்களும் கஸ்ல் வகைக் கவிதைகளைக் கொண்டே
ஆரம்பிக்கப்பட்டிருதனைக் காணலாம். முஅல்லகத் அம்ரு இப்னு குல்தூம் மட்டும்
மதுவினை வர்ணித்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலக்கியவாதிகள் கஸ்ல் என்ற சொல்லை பெண்ணின் மீது காதல் கொள்ளுதல், அவளது
அழகை வர்ணித்தல், அவள் ஆண்களின் உள்ளங்களில் ஏற்படுத்தும் உணர்வுத்
தாக்கம் போன்றவற்றை குறிக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
الفتوة و الصعلفة
ஏழைகள் பணக்காரர்கள் மீது கொண்ட பொறாமையினால் பாடப்பட்டவை. இதன் மூலம்
பணக்காரர்கள் இன்பமடைந்தனர். இத்தகைய கவிஞர்கள் முஆலிகுல் லுஸூஸ் என
பிரபல்யம் பெற்றனர்.
التعاديات
திடீர் திடீரென கருத்தை விட்டும் வேறொரு கருத்துக்கு பாய்வர். காரணம்
இவர்கள் யாப்பிலக்கணம் படித்தோரல்ல. ஒரே கவிதையடியில் பல வர்ணனைகளை
புகுத்தியிருப்பர்.
الوصف
இதில் மனிதர்களை, பாலைவன சூழலை இயற்கையை வர்ணிப்பார்கள்.
الفرق بين الشعر و النثر
الشعر ல் ஒப்புவமை காணப்படும்.
النثر ல் உரை நடை உள்ளதை உள்ளபடி சொல்லும்.
اللفظ
- இவற்றுக்கு தனி சக்தி ( قوة ) காணப்பட்டது.
- خشوبة , بادية பசுமையானவையாக இருந்தன.
- மிருகம், جماد ,பயிர், பறவைகளைக் கூட விளங்கப்படுத்தும் போது இத்தன்மை காணப்பட்டது.
- காதலை, செழிப்பை கூறும் சொற்கள் لين ஆக இருந்தன.
- மிக நுண்ணிய உணர்வையும் வெளிப்படுத்தும் சொற்களாக இருந்தன.
- فصاحة தெளிவாக இருந்தன.
- இரட்டைக் கருத்துப்படும் சொற்கள் மிக மிக அரிதாகவே இருந்தன. காரணம் அவர்களுடைய வாழ்க்கை அவ்வாறே காணப்பட்டது.
- مجاز சிலேடை மிக குறைவு. غزل வகை கவிதைகளில் மட்டுமே مجاز காணப்பட்டது.
கேட்போருக்கு தெரிந்த கருத்துக்களை கொண்டமைந்திருந்தன. அவைகளும்
சமூகத்திலிருந்து பெறப்பட்டிருந்தன. தத்துவங்களோ, மிகைப்படுத்தல்களோ مبالغة
காணப்படவில்லை.
எனினும் கருத்துத் தொடர்பிலும் சிந்தனை ஒழுங்கிலும் சொற்களின் கோர்வைகளிலும் குறைவும் பலவீனமும் காணப்பட்டன.
No comments:
Post a Comment