இஸ்லாமிய நாகரிகத்தின் சிறப்பு.

இஸ்லாமிய நாகரிகத்தின் சிறப்பு, இதன் ஒரு பகுதி முன்னைய தளத்தில்
[ b இஸ்லாமிய நாகரிகம்] ஓரளவுக்கு தரப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாகரிகம் எனும் தலைப்பில் நீங்கள் கற்கும் போது, ஏனைய நாகரிகங்கள் குறிப்பிட்ட ஏதாவதொரு ஒரு பண்பினை மாத்திரம் தமது நோக்காகக் கொண்டு நகர்ந்து சென்றிருப்பதை அவதானித்திருப்பீர்கள்.

ஆனால் இஸ்லாமிய நாகரிகத்தின் தனித்துவம் மிகச் சிறப்பானதாகும். ஏனைய நாகரிகங்கள் நீர் நிலைகளையும் நில வளங்களையும் புவியியல் அமைப்பினையும் மையமாகக் கொண்டு மனித சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு கட்டி எழுப்பப்பட, இஸ்லாமிய நாகரிகம் இறை வழிகாட்டலை அடிப்படையாகக் கொண்டு அதாவது இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களாகிய அல் குர்ஆன், அல் ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டு ஆன்மீகத்தை மையமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஆன்மீகம் என்பது, த்துக்கு கொடுக்கின்ற வரைவிலக்கணம் கவனிக்கத்தக்கது.

No comments: