இஸ்லாமிய நாகரிகம்

உலக ஓட்டத்தில் பல்வேறு நாகரிகங்களைப் பற்றி எம்மால் அறிய முடிகின்றது. அவற்றில் கிரேக்க, உரோம, பாரசீக, இந்து, பெளத்த நாகரிகங்கள் இஸ்லாத்தின் தோற்றத்துக்கு முன்பே செல்வாக்கு பெற்றிருந்தன. கி. பி. ஏழாம் நூற்றாண்டு முதல் இஸ்லாமிய நாகரிகம் மனித சமூகத்தை உயிர்பித்துக் கொண்டிருக்கின்றது.

இஸ்லாத்தின் அடிப்படை மூலதாரங்களாகிய அல் குர்ஆன், அல் ஹதீஸ் ஆகியவற்றின் வருகையுடன் உருவான இஸ்லாமிய கலாசாரம், பண்பாடு எனும் சீரிய சிந்தனைகள், உணர்வுகள், இலட்சியம் என்பவற்றின் பிரதிபலிப்பால் உண்டான அறிவியற் கலைகள், உடை, நடை பாவனை, பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் ஏற்படும் வெளிப்பாடே இஸ்லாமிய நாகரிகம் எனப்படும். அதாவது இஸ்லாமிய சிந்தனைப்போக்கிற்கும் வாழ்க்கைப்போக்கிற்கும் முழுமையாக இயைந்து செல்லும் நாகரிகம் மட்டுமே இஸ்லாமிய நாகரிகம் எனப்படும்.

இஸ்லாமிய நாகரிகத்தின் சிறப்பினை அறிந்து கொள்வதற்கு ஏனைய நாகரிகங்களின் ஒப்பீடு இங்கு அவசியப்படுகின்றது.


நாகரிகங்களுடான ஒப்பீடு :

உலகில் தோற்றம் பெற்ற ஒவ்வொரு நாகரிகங்களும் ஒவ்வொரு முக்கிய பண்பினை அடிப்படையாகக் கொண்டிருந்தன. அப்பண்பினைத் தமது முக்கிய வளர்ச்சியாகக் கொண்டு செயற்பட்டடன. குறிப்பாக கூறுவதானால் அக் குறிப்பிட்ட பண்பு மாத்திரமே தமது நாகரிகத்தின் முதுகெலும்பு எனக் கருதுகின்றன.


கிரேக்க நாகரிகத்தைப் பொருத்த வரை அறிவியலை தமது பண்பெனக் கருதியது. அப் பண்பினை அடிப்படையாகக் கொண்டு கணிதவியல், மருதுவம், இரசாயனவியல் போன்ற கலைகள் வளர்ச்சி பெற்றன.

உரோம நாகரிகத்தைப் பொருத்த வரை இராணுவ படை பலத்தை அடிப்படையாகக் கொண்டது. போர் உக்திகள் வளர்ச்சி அடைந்தமையும், பெரும் படை அணிகள் உருவாக்கப்பட்டமையும், இராணுவ பலத்தைப் பிரயோகித்து ஆட்சியை ஸ்திரப் படுத்தியமையும் அயல் நாடுகளைக் கைப்பற்றி சாம்ராச்சியங்கள் உருவாக்கப்பட்டமையும், நிர்வாக மன்றங்கள் அமைக்கப்பட்டமையும், உரோமன் - டச்சுச் சட்டங்கள் உருவாக்கப்பட்டமையும் இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட உரோம நாகரிகத்தின் அறிமுகப்படுத்தலாகும்.

இந்தியாவில் தோன்றிய நாகரிகம் துறவை அடிப்படைப்பண்பாகக் கொண்டது.

ஐரோப்பிய, மேல் நாட்டு நாகரிகங்கள் உணர்வுகளை திருப்திப்படுத்தும் போக்கினைக் கொண்டிருகின்றது. உலகியல் திருப்தியை அடிப்படையாகக் கொண்டது. நாளுக்கு நாள் உலகை மெருகூட்டும் பணியில் தன்னை ஈடுபடுத்துகின்றது. உலக வளங்கள், பின் விளைவுகள் பற்றி சிந்திக்கப்படாமல் பிரயோகிக்கப்படுகின்றன. பயன் தரக்கூடிய கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டாலும், அழிவுக்கு இட்டுச்செல்பவைகளே மிகைத்துக் காணப்படுகின்றன. ஆன்மீகம் பற்றியோ ஒழுக்க விழுமியங்கள் பற்றியோ இது அலட்டிக்கொள்ளவில்லை.

மேலே குறிப்பிடப்பட்ட நாகரிகங்கள் ஒவ்வொன்றும் மனிதனுடன் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட ஏதாவது ஒரு துறைக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன.

தொடர்ச்சி . . c. இஸ்லாமிய நாகரிகத்தின் சிறப்பில் காண்க.


No comments: