" எந்த ஒரு சமூகம் தன் இறந்த கால வரலாற்றையும் நிகழ்கால வரலாற்றையும் அறிந்திருக்கவில்லையோ அந்த சமூகத்துக்கு எதிர் காலமே கிடையாது."
- இப்னு கல்தூன் -
- இப்னு கல்தூன் -
முஸ்லிம் சமூகத்தின் வாழ்வும் நடத்தையும் மிகப் பெறுமதி வாய்ந்தவைகளாகும். அந்தப் பெறுமதி அர்த்தம் உடையதாக வேண்டும் என்றால் கடந்து வந்த பாதையை மீட்டிப் பார்க்க வேண்டியது நமது கடமையாகும். அந்த வகையில் இஸ்லாம் எத்தகைய சவால்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது என்பதனை அறிவதன் மூலம் உலகிட்கு ஒரு அழகிய முன்மாதிரியை வழங்கலாம்.
பெருமானார் (ஸல்) அவர்களும் சஹாபா தோழர்களும் எத்தனையோ துயர துன்பங்களுக்க முகம் கொடுத்த போதெல்லாம் பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். தமக்கு கெடுதல் செய்தவர்களையெல்லாம் மன்னித்தார்கள். இவ்வாறான செயல்கள் மூலம் கட்டி எழுப்பப்பட்டதுதான் இஸ்லாமாகும். அதனை சிதைத்துவிட எங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது . . . .
உண்மையில் நாம் இந்த இஸ்லாத்தில் பெயரளவில் இருந்து கொண்டிருக்கின்றோம். பெருமானார் (ஸல்) அவர்களும் சஹாபாக்களும் அனுபவித்த துன்பங்களுக்கும் தியாகங்களுக்கும் நாம் முகம் கொடுக்கவில்லை என்ற காரணத்தினால்தான் அசட்டையாக இருந்து வருகின்றோம். அந்த தியாகங்களையும் உண்மைக்காக உயிரை கொடுத்த துணிச்சல் மிகு வரலாற்றினையும் நாம் புரட்டிப் பார்க்கும் பொழுது இஸ்லாத்தைப் பற்றிய தெளிவும் மதிப்பும் எம்மில் நிச்சயம் உயரும்! இன்ஷாஅல்லாஹ்!

No comments:
Post a Comment